கவுண்டி கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட்டாகிய பிரித்வி ஷா - வைரல் காணொளி!

Updated: Sat, Aug 05 2023 14:27 IST
கவுண்டி கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட்டாகிய பிரித்வி ஷா - வைரல் காணொளி! (Image Source: Google)

இந்திய அணிக்காக 18 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானவர் பிரித்வி ஷா. அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். இதனால் பிரித்வி ஷாவை சச்சின், சேவாக் மற்றும் லாரா உள்ளிட்டோரை சேர்த்து வைத்த செய்த கலவை என்று ரவி சாஸ்திரியும் சேர்ந்து புகழ்ந்து பாராட்டினார்.

இதனால் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, அதன்பின் வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதேபோல் 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் மட்டுமே மொத்தமாக இந்திய அணிக்காக பிரித்வி ஷா களமிறங்கியுள்ளார்.

இவருக்கு கால்களை நகர்த்தால் விளையாடுவதால், ஃபுட் வொர்க் பிரச்சனையோடு சேர்த்து, ஷார்ட் பால்களை சந்திப்பதிலும் பிரச்சனை உள்ளது. குறிப்பாக 140 கி.மீ. வேகத்திற்கு மேல் வீசப்படும் ஷார்ட் பால்களை பிரித்வி ஷாவால் எதுவுமே செய்ய முடிந்ததில்லை. இதன் காரணமாக பிரித்வி ஷாவால் ஐபிஎல் தொடரில் கூட சரியாக விளையாட முடியவில்லை.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் நம்பிக்கையை கூட காப்பாற்ற முடியாமல் தவித்தார். இந்த நிலையில் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுப்பதற்காக இங்கிலாந்தின் கவுண்டி ஒருநாள் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளார். நார்த்தம்டன்ஷையர் அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா, கிளவ்செஸ்டையர் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் கண்டார்.

 

அறிமுக போட்டியில் நிதானமாக விளையாடிய பிரித்வி ஷா, 34 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வந்தார். இந்த நிலையில் பால்  வான் மீக்கெரன் வீசிய ஷார்ட் பாலில், புல் ஷாட் அடிக்க முயன்று கீழே விழுந்தார். அப்போது அவரின் கால்களை தெரியாமல் ஸ்டம்பில் பட்டு ஹிட் விக்கெட் முறையில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை