பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசனில் நேற்று நடைபெற்று வரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணி, பெஸ்வர் ஸால்மி அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்ட கிளாடியேட்டர்ஸ் முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய பெஸ்வர் ஸால்மி அணியில் காம்ரன் அக்மல் - டேவிட் மில்லர் இணை அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதனால் 20 ஓவர்களில் பெஸ்வர் ஸால்மி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 73 ரன்களையும், காம்ரன் அக்மல் 59 ரன்களையும் சேர்த்தனர். குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் முகமது நவாஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாயிம் ஆயூப் - உஸ்மான் கான் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இதில் ஆயூப் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து உஸ்மான் கானும் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் பெஸ்வர் ஸால்மி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

பெஸ்வர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி..!

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News