பிஎஸ்எல் 2021: ரஷீத் கான் சுழலில் சுருண்டது பெஸ்வர் ஸால்மி!

Updated: Fri, Jun 11 2021 12:01 IST
Image Source: Google

பிஎஸ்எல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி, பெஸ்வர் ஸால்மி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஸ்வர் ஸால்மி அணி பந்துவீச முடிவு செய்தது. 

இதையடுத்து களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஃபகர் ஸமாம், சொஹைல் அக்தர், ஃபைஸான், முகமது ஹபீஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பி ஜோடி சேர்ந்த பென் டங்க் - டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில்க் டிம் டேவிட் அரைசதம் கடக்க, பென் டங்க் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை குவித்தது. அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 64 ரன்களை சேர்த்தார்.

அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பெஸ்வர் ஸால்மி அணியில் காம்ரன் அக்மல், ஹைதர் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் சொயிப் மாலிக் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ரஷீத் கானின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இப்போட்டியில் ரஷீத் கான் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெஸ்வர் ஸால்மி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் பெஸ்வர் ஸால்மி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அதேசமயம் ரஷீத் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை