பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
Advertisement
அதன்படி களமிறங்கிய கலந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான் - அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ஷஃபிக் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க மறுமுனையிலிருந்த ஃபகர் ஸமான் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த காம்ரன் குலாம் தனது பங்கிற்கு 43 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் காகூர் கலந்தர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 76 ரன்களைச் சேர்த்தார்.