பிஎஸ்எல் 2022: முன்ரோ, ஸ்டிர்லிங், ஆசம் கான் அதிரடி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணிக்கு பால் ஸ்டிர்லிங் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த பால் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த காலின் முன்ரோ - ஆசாம் கான் இணை அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின்னர் ஆசாம் கான் 65 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த காலின் முன்ரோ 71 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களைச் சேர்த்தது. குயிட்டா அணி தரப்பில் முகமது நவாஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.