பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஃபகர் ஸ்மான், பிலிப் சால்ட் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களோடு ஆட்டமிழந்தனர். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷஃபிக் - காம்ரன் குலாம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அப்துல்லா ஷஃபிக் அரைசதம் கடந்தார்.

அதன்பின் 52 ரன்களில் ஷஃபிக் ஆட்டமிழக்க, 30 ரன்களில் காம்ரன் குலாமும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் லியாம் டௌசன், முகமது வாசிம் ஜூனியர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News