பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 8ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் முகமது ரிஸ்வான், சோயிப் மக்சூத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷான் மசூத் - ரிலே ரோஸ்ஸோ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் 43 ரன்னில் மசூத் ஆட்டமிழக்க, அடுத்து களமிறக்கிய டிம் டேவிட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தர். 

அதேபோல் மறுமுனையிலிருந்த ரொஸ்ஸோவும் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய டிம் டேவிட் 71 ரன்னில் ஆட்டமிழக்க, ரொஸ்ஸோ இறுதிவரை ஆட்டமிழக்கமால் 67 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைக் குவித்தது. இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News