பிஎஸ்எல் 2022: ரிஸ்வான், டிம் டேவிட் அதிரடி; பெஷ்வர் அணிக்கு 223 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற் 13ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற பெஷ்வர் ஸால்மி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தன.
இதில் ஷான் மசூத் 35 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ரிஸ்வான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பின்னர் களமிறங்கிய டிம் டேவிட்டும் அதிரடியில் மிரட்டினார்.
இப்போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 82 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 222 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 82 ரன்களையும், டிம் டேவிட் 51 ரன்களையும் சேர்த்தனர்.