பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் வரும் ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

Advertisement

இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் லாகூர் கலந்தர்ஸ் அணி நேற்றைய தினம் தங்களது வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 

Advertisement

இந்நிலையில் லாகூர் கலந்தர்ஸ் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் முல்தானின் சுல்தான்ஸை எதிர்கொள்கிறது. 

லாகூர் கலந்தர்ஸ் : ஷாஹீன் அஃப்ரிடி (கே), ஃபகர் ஸமான், ரஷீத் கான், ஹாரிஸ் ரவுஃப், டேவிட் வைஸ், முகமது ஹபீஸ், அப்துல்லா ஷபீக், ஹாரி ப்ரூக், ஃபில் சால்ட், அகமது டேனியல், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், சோஹைல் அக்தர், கம்ரான் குலாம், ஜீஷன் அஷ்ரஃப், மாஸ் கான், சமித் படேல், சையத் ஃபரிதூம் மெஹ்மூத்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News