பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி, சர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்கொண்டது.

Advertisement

அதன்படி கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் மார்ட்டின் கப்தில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Advertisement

பின் அதிரடி காட்ட தொடங்கிய சிறுது நேரத்திலேயே மார்ட்ட்டின் கப்தில் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஜேசன் ராயும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது நவாஸும் 2 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமத் - இஃப்திகார் அஹ்மத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். 

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சர்ஃப்ராஸ் அஹ்மத் 39 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த இஃப்திகார் அஹ்மத் 34 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த ஓடியன் ஸ்மித் தனது பங்கிற்கு 25 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இஃப்திகார் அஹ்மத் 50 ரன்களைச் சேர்த்தார். பெஷாவர் அணி தரப்பில் உஸ்மான் காதிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News