பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று கராச்சியில் நடந்துவரும் போட்டியில் கராச்சி கிங்ஸும் முல்தான் சுல்தான்ஸும் விளைடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் மந்தமாக பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் 12 பந்தில் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய தாஹிர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 

Advertisement

அதன்பின் பொறுப்புடன் பேட்டிங் ஆடிய தாஹிர் 46 பந்தில் 65 ரன்கள் அடித்தார். ஆனால் தொடக்க வீரர் மேத்யூவேட் படுமந்தமாக பேட்டிங் செய்து  47 பந்தில் 46 ரன்கள் மட்டுமே அடித்ததால், கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்  167 ரன்கள் மட்டுமே அடித்தது.  முல்தான் சுல்தான்ஸ் தரப்பில் இஷான்ல்லா  இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் ஷான் மசூத் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மசூத் 25 ரன்களிலும், ரிஸ்வான் 29 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தன்ர்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ், டேவிட் மில்லர், அன்வர் அலி, குஷ்டில் ஷா, உசாமா மிர், கார்லோஸ் பிராத்வைட் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 16.3 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

கராச்சி கிங்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி, ஷோயப் மாலிக் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News