பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்த இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மார்ட்டின் கப்தில் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துகொடுத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய அகா சல்மான் 31 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

Advertisement

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷதாப் கான் 23 ரன்களுக்கும், அசாம் கான் 18 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஃபஹீம் அஷ்ரஃப், ஹைதர் அலி, இமாத் வாசிம் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில் மார்ட்டின் கப்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 56 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் முகமது அமிர், அகீல் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அதன்படி ஜேசன் ராய் ஒரு ரன்னிலும், சௌத் சகீல் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ரைலீ ரூஸோவ் 5 ரன்களிலும், கவாஜா நஃபே 5 ரன்களிலும், லௌரி எவான்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை ஏமாற்றமளித்தனர். இதனால் கிளாடியேட்டர்ஸ் அணி 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த அகீல் ஹொசைன் - ஒமைர் யூசுஃப் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

பின் அகீல் ஹொசைன் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது வாசிம் ஜூனியர் 6 ரன்களுக்கும், முகமது அமிர் 23 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் அரசைதம் கடந்திருந்த ஒமைர் யூசுஃப் 50 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் கிளாடியேட்டர்ஸ் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி தரப்பில் இமாத் வசீம் 3 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News