பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.அதன்பின் ஹென்றிக்ஸுடன் ஜோடி சேர்ந்த உஸ்மான் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய உஸ்மான் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரீஸா ஹென்றிக்ஸ் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய தையப் தாஹிரும் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய இஃப்திகார் அஹ்மத் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசினார். அதேசமயம் மறுபக்கம் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த உஸ்மான் கான் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 96 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஃப்திகார் அஹ்மத் 2 பவுண்டரின், 3 சிக்சர்கள் என 40 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்து அசத்தியது. லாகூர் அணி தரப்பில் கேப்டன் ஷாஹின் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News