பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி சுல்தான்ஸ் அபார வெற்றி!

Updated: Wed, Feb 02 2022 11:35 IST
PSL: David, Rossouw star as Multan Sultans defeat Islamabad United (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி டிம் டேவிட், ரிலே ரொஸ்ஸோ ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக டிம் டேவிட் 71 ரன்னும், ரிலே ரொஸ்ஸோ 67 ரன்னும் சேர்த்தனர். அதன்பின் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இஸ்லாமாபாத் அணி களமிறங்கியது.

அந்த அணியில் பால் ஸ்டிர்லிங், அலெக்ஸ் ஹேல்ஸ், ரஹ்மனுல்லா குர்பாஸ் என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சதாப் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சதாப் கான் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இதனால் 19.4 ஓவர்களிலேயே இஸ்லாமாபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களை மட்டுமே சேர்த்தது. சுல்தான்ஸ் அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெடை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை