பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி ஹாரி ப்ரூக்கின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 102 ரன்களையும், ஃபகர் ஸமான் 51 ரன்களையும் சேர்த்தனர். இஸ்லாமாபாத் அணி தரப்பில் ஃபஹீம் அஷரஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய இஸ்லாமாபாத் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், முபசிர் கான், முகமது வாசிம், லியாம் டௌசன், ஆசாம் கான் என அனைவரும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News