பிஎஸ்எல் 2022: ஜேசன் ராய் காட்டடி; குயிட்டா கிளடியேட்டர்ஸ் அபார வெற்றி!

Updated: Tue, Feb 08 2022 11:54 IST
PSL: Jason Roy scores century as Quetta Gladiators defeat Lahore Qalandars (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி ஃபகர் ஸமான், ஹேரி ப்ரூக் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 70 ரன்களையும், ஹேரி ப்ரூக் 41 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஜேம்ஸ் வின்ஸும் அதிரடியில் மிரட்டினார்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய் 49 பந்துகளில் சதமடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதன்பின் 116 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். 

இருப்பினும் அந்த அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை