பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Sun, Mar 10 2024 13:01 IST
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியும், ரைலீ ரூஸோவ் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் லாகூர் கலந்தர்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. மறுபக்கம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றில் நுழையும் வாய்ப்புள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -  லாகூர் கலந்தர்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. அதிலும் இந்த அமைதானத்தின் பேட்டங் சராசரியானது 180 ரன்களை தாண்டுவதால் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. அதேசயம் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் இமாலய இலக்குகளையும் அணிகள் எளிதாக கடந்து வெற்றிபெற்றிருந்தன. இதனால் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் மைதானத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை குவிக்கலாம்.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • லாகூர் கலந்தர்ஸ் - 09
  • குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- 08

உத்தேச லெவன்

லாகூர் கலாந்தர்ஸ்: சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஸமான், ரஸ்ஸி வான்டெர் டுசென், சிக்கந்தர் ராசா, ஷாய் ஹோப், அஹ்சன் பாட்டி, டேவிட் வைஸ், ஷஹீன் அஃப்ரிடி (கே), ஜஹந்தத் கான், தயப் அப்பாஸ், ஜமான் கான்

குயிட்டா கிளாடியேட்டர்ஸ்: சௌத் ஷகீல், ஜேசன் ராய், ரைலீ ரூஸோவ் (கே), கவாஜா நஃபே, ஒமைர் யூசுப், லௌரி எவன்ஸ், அகீல் ஹொசைன், முகமது ஹஸ்னைன், முகமது அமீர், அப்ரார் அகமது, சோஹைல் கான்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: சாஹிப்சாதா ஃபர்ஹான்
  • பேட்டர்ஸ்: ஜேசன் ராய், ரஸ்ஸி வான்டெர் டுசென் (துணை கேப்டன்), லாரி எவன்ஸ், ரைலீ ரூஸோவ்
  • ஆல்-ரவுண்டர்கள்: சௌத் ஷகீல் (கேப்டன்), டேவிட் வைஸ், சிக்கந்தர் ராசா, ஜே கான்
  • பந்துவீச்சாளர்கள்: அகீல் ஹொசைன், ஸமான் கான்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை