பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Mon, Mar 11 2024 22:21 IST
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் முடிவடையவுள்ளது. இதில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ரைலீ ரூஸோவ் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் ஸால்மி, முல்தான் சுல்தன்ஸ், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனால் நாளைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது

போட்டி தகவல்கள

  • மோதும் அணிகள் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ்
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. அதிலும் இந்த அமைதானத்தின் பேட்டங் சராசரியானது 180 ரன்களை தாண்டுவதால் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. அதேசயம் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் இமாலய இலக்குகளையும் அணிகள் எளிதாக கடந்து வெற்றிபெற்றிருந்தன. இதனால் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் மைதானத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை குவிக்கலாம்.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 12
  • குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - 04
  • முல்தான் சுல்தான்ஸ்- 08

உத்தேச லெவன்

குயிட்டா கிளாடியேட்டர்ஸ்: ஜேசன் ராய், சௌத் ஷகீல், கவாஜா நஃபே, ரைலீ ரூஸோவ் (கே), லௌரி எவன்ஸ், ஒமைர் யூசுஃப், அகீல் ஹொசைன், முகமது வாசிம் ஜூனியர், முகமது அமீர், அப்ரார் அகமது, சோஹைல் கான்

முல்தான் சுல்தான்ஸ்: யாசிர் கான், முகமது ரிஸ்வான் (கே), உஸ்மான் கான், ஜான்சன் சார்லஸ், இஃப்திகார் அகமது, தயப் தாஹிர், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அலி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: முகமது ரிஸ்வான், லௌரி எவன்ஸ், உஸ்மான் கான் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ஜேசன் ராய், ரைலீ ரூஸோவ்
  • ஆல்-ரவுண்டர்கள்: சௌத் ஷகீல் (துணை கேப்டன்), இஃப்திகார் அகமது, அகீல் ஹொசைன், கிறிஸ் ஜோர்டான்
  • பந்துவீச்சாளர்கள்: உசாமா மிர், அப்ரார் அகமது

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை