ஆஸ்திரேலிய தொடரிலிருந்து முஸ்பிக்கூர், லிட்டன் தாஸ் விலகல்?

Updated: Tue, Jul 27 2021 20:52 IST
Rahim, Das To Miss Upcoming Series Against Australia (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி டாக்காவில் நடைபெறவுள்ளது..

இதற்கான ஆஸ்திரேலிய அணி நாளைய தினம் வெஸ்ட் இண்டீஸிலிருந்து தனி விமானம் மூலம் வங்கதேசம் செல்லவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியிலிருந்து நட்சத்திர வீரர்கள் முஸ்பிக்கூர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் விலகியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவர்கள் இருவரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரின் போது பயோ பபுள் சூழலை விட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதால், அவர்களால் ஆஸ்திரேலிய தொடரில் பங்குபெற முடியாது என அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனெனில் இத்தொடரில் பங்கேற்கு இரு அணி வீரர்கள் தங்ககும் விடுதி கடந்த 20ஆம் தேதி முதல் பயோ பபுள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்கள் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பினால் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்படி அவர்கள் தனிமைப்படுத்தப்படும் பட்சத்தில் நிச்சயம் இத்தொடரில் பங்கேற்க முடியாது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயம் காரணமாக வங்கதேச டி20 தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை