அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய கார்ன்வால்; வைரலாகும் காணொளி!

Updated: Wed, Sep 18 2024 09:12 IST
Image Source: Google

பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டி பார்படாஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டி பெவிலியனுக்கு திரும்பினர். 

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 32 ரன்களையும், ஜோஷுவா டா சில்வா 25 ரன்களையும் சேர்த்தனர். பார்படாஸ் ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரக்கீம் கார்ன்வால் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு துணையாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும், ஒபேத் மெக்காய் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் கதீம் அலீன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கதீம் 25 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், அலிக் அதானாஸ் 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 11.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சில் மூலம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பார்படாஸ் ராயல்ஸ் அணி வீரர் ரஹ்கீம் கார்ன்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ரஹ்கீன் கார்ன்வால் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை