தோனியின் வருகைக்கு பின் விக்கெட் கீப்பர்களுக்கு தற்போது பஞ்சமில்லை - ராகுல் டிராவிட்!

Updated: Tue, Jan 24 2023 15:37 IST
Rahul Dravid Gives A Special Mention To MS Dhoni During Press Conference! (Image Source: Twitter)

இந்தியா -  நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது இந்தூரில் நடைபெற்று வருகிறது. தற்போது ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி மீண்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பதில் கேஎல் ராகுல் ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பராக இருக்கிறார்.

தற்போது ராகுலுக்கு கல்யாணம் காரணமாக தொடரில் விளையாடவில்லை என்றாலும், இஷான் கிஷன் அந்த பணியை செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் விக்கெட் கீப்பர்களின் நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் தெரிந்த விக்கெட் கீப்பரை தான் இந்திய அணி தேடி வருவதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், “தோனியின் வருகைக்குப் பிறகு விக்கெட் கீப்பர் மட்டும் தெரிந்த வீரர் அணிக்கு தேவையில்லாத ஒரு சூழல் உருவாகிவிட்டது. இப்போது இந்திய அணிக்கு அதிர்ஷ்டமான காலம் என்று தான் கூறுவேன். ஒரு காலத்தில் விக்கெட் கீப்பர் யாரும் இல்லாத நிலையில் நான் அந்தப் பணியை செய்தேன். அதன் பிறகு தோனி போன்ற வீரர்கள் வந்தவுடன் விக்கெட் கீப்பர்களுக்கான நிலையே மாறிவிட்டது. 

இப்போது இஷான் கிஷன், கே எஸ் பரத் போன்ற திறமை வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். கே எஸ் பரத் இந்திய அணிக்காக இன்னும் விளையாடவில்லை . ஆனால் இசான் கிஷன் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதேபோன்று கே எல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் இருக்கிறார்கள். 

துரதரிஷ்டமாக ரிஷப் பந்த் காயம் அடைந்துள்ளார். எனினும் இத்தனை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதனால் நீங்கள் நன்றாக பேட்டிங் தெரிந்த விக்கெட் கீப்பராக இருந்தால் மட்டுமே உங்களால் அணிக்குள் வர முடியும். பேட்டிங்கில் நீங்கள் பெரிய பங்களிப்பை அணிக்காக செய்ய வேண்டும்.

இதற்காகத்தான் நாங்கள் ஜித்தேஷ் சர்மா என்ற வீரரை டி20 கிரிக்கெட்டில் தற்போது சேர்த்திருக்கிறோம். அவர் குறைந்த பந்துகளில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். முஸ்தாக் அலி தொடரிலும் ஐபிஎல் தொடரிலும் அவருடைய திறமையை நான் பார்த்திருக்கிறேன். எனவே தோனிக்கு பிறகு அனைத்து அணியிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மட்டுமே சேர்க்கப்படுகிறார்கள்” என்று டிராவிட் கூறினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை