சீனியர் வீரருக்கு எச்சரிக்கைவிடுத்த ராகுல் டிராவிட்!

Updated: Mon, Aug 01 2022 13:27 IST
Rahul Dravid opens about KL Rahul's absence (Image Source: Google)

இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்து கேப்டனாக இருப்பார் என முன்பு பேசப்பட்டது.விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் ஓய்வுக்கு செல்லும்போதெல்லாம் இவர்தான் கேப்டனாக இருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர் காயம் காரணமாக அடிக்கடி திடீரென்று அணியிலிருந்து விலகும் நிலை இருந்தது.

இதனால், காயத்தை முழுமையாக குணமாக்க ஐபிஎல் 15ஆவது சீசன் முடிந்த பிறகு ஜெர்மனிக்கு சென்று அறுவை சிகிச்சை சென்று கொண்டார். இதனால் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கிய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டார்.

கே.எல்.ராகுல் முழு பிட்னஸுடன் இருப்பதால், தொடர்ந்து அதிரடி காட்டி ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த சமயத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டதால் தொடரிலிருந்து முழுமையாக விலகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கும் ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்தும் கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பையில் கே.எல்.ராகுலுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது. இந்த ஆசியக் கோப்பையில் இடம் கிடைக்கவில்லை என்றால், அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பையிலும் கே.எல்.ராகுலுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு கிடைக்காது என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், கே.எல்.ராகுலிடம் பேசிய பயிற்சியாளர் ராகுல் திராவிட், “உனக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. இதனால், டி20 உலகக் கோப்பையில் இடம் கிடைப்பது கஷ்டம். இந்த காலகட்டத்தில் நன்றாக ஓய்வெடுத்து, டி20 உலகக் கோப்பைக்கு பிறகு அணிக்கு திரும்பினால் நன்றாக இருக்கும்” என கூறியதாக ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கேஎல் ராகுல் தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், “என்னைப் பற்றிய 2 விஷயங்கள் குறித்து நான் விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன். ஒன்று எனது உடல் நலம். மற்றொன்று போட்டிக்கான உடல் தகுதி. ஜுன் மாதம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து உடற்தகுதியை மீட்க பயிற்சி செய்து, மேற்கிந்தியத் தீவுகளுக்காக தீவிர வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டேன்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக எனக்கு கொரோனா உறுதியானது. இதனால்தான், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க முடியவில்லை. மீண்டும் இரண்டு வாரங்களில் எனது பிட்னசை பிசிசிஐயிடம் நிரூபித்து, அணிக்கு திரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை