உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா - நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இரு அணிகள் இடையேயான இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement

இறுதி போட்டிக்கான இந்திய அணியை, பிசிசிஐ., கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி இந்திய அணியில் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், வாசிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும், சீனியர் வீரர்களான புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் போன்ற வீரர்களின் பெயர்கள் இடம்பெறாதது புதிய விவாதத்தை ஏற்படுத்தியது.

Advertisement

புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவை அணியில் எடுக்காதது மிக தவறான முடிவு என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், குல்தீப் யாதவ் அணியில் நிச்சயம் இடம் பிடித்திருக்க வேண்டும் என முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ராகுல் டிராவிட்“தற்போதுள்ள இந்திய அணி நல்ல தகுதியான வீரர்களை உள்ளடக்கிய அணியாக உள்ளது. 20 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அண்மைக் காலத்தில் ஜடேஜா, அக்ஸர் படேல், சுந்தர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால் அவர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். அஷ்வின் – ஜடேஜாவை போலவே வாஷிங்டன், அக்ஸர் படேல் பேட்டிங்கில் நன்றாக ஆடுவதால் பேட்டிங் டெப்த் அதிகரிக்கிறது. எனவே அணியின் சிறந்த லெவன் காம்பினேஷனை கருத்தில் கொண்டு அவர்கள் எடுக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா, சுப்மன் கில், மட்யாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News