ரோஹித் சர்மாவை இப்படி பார்த்ததில்லை - ராகுல் டிராவிட்!

Updated: Fri, Dec 09 2022 11:18 IST
Image Source: Google

வங்கதேசம் சென்று ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்து இருக்கிறது.

முதல் ஒருநாள் போட்டியில் துரதிஷ்டவசமாக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை போராடி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 271 ரன்கள் அடித்திருந்தது.

அதை சேஸ் செய்த இந்திய அணி 64 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தபோது, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங் செய்து கொண்டிருக்கையில், பந்து பட்டு கட்டைவிரலில் படுகாயம் அடைந்ததார். 

இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் கட்டைவிரல் பகுதியில் இருக்கும் எலும்பு சற்று விலகி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கவில்லை. விராட் கோலி களமிறங்கினார். ஸ்கொரை சேஸ் செய்து எளிதாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் போட்டியை வென்று விடுவர் என எதிர்பார்த்தனர். ஆனால் மளமளவென விக்கெட்டுகள் இழந்து வந்ததால், வேறு வழியின்றி ரோகித் சர்மா களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஒன்பதாவது இடத்தில் களமிறங்கிய அவர் இறுதி வரை போராடினார். கட்டைவிரலில் காயம் இருந்த போதும் அதை பொருட்படுத்தாமல் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. துரதிஷ்டவசமாக அவரால் ரன் ஏதும் அடிக்க முடியவில்லை. அதனால் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கிட்டத்தட்ட 40 முதல் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ வேண்டிய நிலையில் இருந்த இந்திய அணியை ரோகித் சர்மா தனது போராட்டத்தால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் ரோஹித் சர்மா குறித்து பேசிய ராகுல் டிராவிட், “ரோஹித் சர்மாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டை நான் பார்த்தேன். தீவிரமான காயம் அது. கையில் தையல் போடப்பட்டிருக்கிறது. படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த சூழலில் அவர் களமிறங்கி இறுதி வரை போராடியதை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. இந்த அளவிற்கு ரோகித் சர்மா தைரியமானவரா? என்று எனக்கு தோன்றியது.

இதற்கு முன்னர் இப்படி ஒரு ரோகித் சர்மாவை நான் பார்த்ததே இல்லை. இந்த போராட்ட குணம் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் மீது உள்ள மரியாதையும் அதிகரித்து இருக்கிறது. இப்போது வரை அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. எப்படி இந்த அளவிற்கு விளையாடினார்? என நினைக்கும்போது மிகப்பெரிய மரியாதையை அவர் மீது வருகிறது” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை