வங்கதேச தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகல்; கேஎல் ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு!

Updated: Sun, Dec 11 2022 21:19 IST
Rahul To Lead India In First Test Vs Bangladesh In Absence Of Injured Rohit; Saini, Saurabh Replace (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்காளதேச அணி தொடரை வென்றது.

இதன் பின்னர் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோஹித் சர்மா , வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர் .

ரோஹித் சர்மா விலகியதால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணைக்கேப்டனாக சட்டேஷ்வர் புஜாரா நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அறிமுக வீரர் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. முகமது ஷமி மற்றும் ஜடேஜாவுக்கு பதிலாக இந்திய அணியில் நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுளள்ளனர் .மேலும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டை தேர்வு செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி - கேஎல் ராகுல் , சுப்மன் கில், புஜாரா , விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் , ரிஷாப் பண்ட் , கேஎஸ் பரத் , அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை