ஐபிஎல் தொடரில் இன்று ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போடியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து பேசிய ரியான் பராக், “கடைசி 2 ஓவர்கள் வரை நான் விளையாட திட்டமிட்டிருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக 18ஆவது ஓவரில் நான் ஆட்டமிழந்தேன். அதனால் அது என் தரப்பில் இருந்து ஒரு தவறான கணக்கீடாகும். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் கடைசி 6 ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். வேறு பந்துவீச்சு விருப்பங்களை பயன்படுத்தி இருக்கலாம்.

Advertisement

ஆனால் குறை சொல்ல வேறு யாரும் இல்லை, நாங்களே அதை முடித்திருக்க வேண்டும். பின்னோக்கிப் பார்த்தால் வேறு ஏதாவது செய்திருக்கலாம். மேலும் இப்போட்டியில் ஆண்ட்ரே ரஸல் முதல் 10 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதன்பின் அவர் தனது வேகத்தை அதிகரித்த விதம் விதம் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. இது சிக்ஸர்கள் அடிக்கப்படும் மைதானம். விக்கெட் கொஞ்சம் தந்திரமாக இருந்தது, அதனால் நான் எனது ஷாட்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

நான் அவுட் ஆகும் வரை அதை நன்றாகச் செய்தேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் தோல்வியுற்ற கேப்டனாக இந்த நேர்காணலை கொடுக்க தயங்குகிறேன். மேலும் நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படவில்லை. அதற்கான விளைவை தான் இங்கே நாம் பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிவரை சென்று தோல்வியைத் தழுவியது இது நான்காவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 ரன்களையும், இறுதியில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் கேகேஆர் அணி இன்னிங்ஸ் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்களைச் சேர்த்தது.

Also Read: LIVE Cricket Score

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அபாரமாக விளையாடிய ரியான் பராக் 6 பவுண்டரி 8 சிக்ஸர்களுடன் 95 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34 ரன்னிலும், ஷிம்ரான் ஹெட்மையர் 29 ரன்னிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபம் தூபே 25 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்துள்ளது.  
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News