ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 30-வது போட்டி நேற்று மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஷ்ரேயாஸ் ஐய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

Advertisement

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதல் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கொல்கத்தா அணி பந்துவீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக சிக்சர், பவுண்டரிகளாக விளாசித்தள்ளிய ஜாஸ் பட்லர் சதமடித்து அசத்தினார். பட்லரின் அதிரடி சதத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 217 ரன்களை குவித்தது.

Advertisement

இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, வேகமாக ரன்குவிக்கத் தொடங்கியது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐய்யர் 85 ரன்கள் குவித்து அசத்தியபோதும் அந்த அணி சஹால் வீசிய 17ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து 18ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் அதிரடியாக ஆடி 20 ரன்களை குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 

இறுதி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஓபிடு மெக்காய் பந்துவீச வந்தார். அந்த ஓவரில் ஷெல்டன் ஜாக்சன் மற்றும் உமேஷ் யாதவ்வை அவுட் ஆக்கி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் ஓபெத் மெக்காய். குறிப்பாக ஷெல்டன் ஜாக்சன் விக்கெட்டை வீழ்த்தியதும் அவர் கொண்டாடிய விதம் தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

 

அந்த விக்கெட்டை வீழ்த்தியதும் புஷ்பா படத்தில் ‘அடங்காதவன் டா' என்கிற டயலாக்கை பேசி நடிகர் அல்லு அர்ஜுன் போடும் ஸ்டெப்பை மைதானத்தில் போட்டு அசத்தினார் ஓபிடு மெக்காய். இது குறித்த காணொளி  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News