சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சௌராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆலுரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய சௌராஷ்டிரா அணிக்கு ஹர்விக் தேசாய் - தரங் கோயல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தரங் கோயல் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, ஹர்விக் தேசாயும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பிரெரக் மான்கட் 16 ரன்களுக்கும், விஷ்வராஜ் ஜடேஜா 15 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய சிராஜ் ஜானி அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிராஜ் ஜானி 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷங்கைக் கொடுத்தனர். 

இதன்மூலம் சௌராஷ்டிரா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. மத்திய பிரதேச அணி தரப்பில் ஆவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மத்திய பிரதேச அணிக்கு அர்பித் கௌத் - ஹர்ஷ் கௌலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹர்ஷ் கௌலி 11 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தது. 

அவரைத்தொடர்ந்து சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற அர்பித் கௌத் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஷுப்ரன்ஷு செனாபதி 24 ரன்களிலும், கேப்டன் ராஜத் பட்டிதார் 28 ரன்னிலும் என ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த வெங்கடேஷ் ஐயர் - ஹர்ப்ரீத் சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களையும், ஹர்பிரீத் சிங் 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மத்திய பிரதேச அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மத்திய பிரதேச அணியானது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News