ரஞ்சி கோப்பை 2022/23: இரண்டாவது முறையாக கொப்பையை வென்றது சௌராஷ்டிரா!

Updated: Sun, Feb 19 2023 12:57 IST
Ranji Trophy 2022-23: Saurashtra Thrash Bengal By 9 Wickets To Clinch Title (Image Source: Google)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. இதில் பெங்கால் - சௌராஷ்டிரா அணிகள் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற  சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 174 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷபாஸ் அகமது 69 ரன்களும், அசோக் போரெல் 50 ரன்களும் அடித்தனர். அவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. சௌராஷ்டிரா அணியில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் ஜெய்தேவ் உனாத்கத் மற்றும் சேத்தன் சகாரியா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய சௌராஷ்டிரா அணி, முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்தது. சௌராஷ்டிரா அணியில், ஹர்விக் தேசாய்(50), ஷெல்டான் ஜாக்சன்(59), அர்பிட் வசவடா(81), சிராக் ஜானி(60) ஆகியோர் அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்களும் பங்களிப்பு செய்ததால் சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்தது.

பின்னர் 230 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய பெங்கால் அணி 241 ரன்கள் அடித்தது. வெறும் 11 ரன்கள் மட்டுமே பெங்கால் முன்னிலை பெற்ற, 12 ரன்கள் என்ற இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சௌராஷ்டிரா அணி 2ஆவது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. கடந்த சீசனிலும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருந்த சௌராஷ்டிரா அணி, தொடர்ச்சியாக 2ஆவது முறை ரஞ்சி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை