விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஷீத் கான்!

Updated: Fri, Aug 26 2022 11:56 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாயில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பயிற்சி முடிந்ததும் ரஷித் கானை விராட் கோலி சந்தித்து பேசினார். அப்போது இருவரும் கை கொடுத்து ஒருவர் ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிலையில் விராட் கோலி குறித்து ரஷீத் கான் பல்வேறு கருத்துகளை கூறியிருக்கிறார். விராட் கோலி அண்மைக்காலமாக சரிவர விளையாட வில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷீத் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி தந்துள்ள ரஷீத் கான், “என்னைப் பொறுத்தவரை விராட் கோலி விளையாடும் ஷாட்களை பார்க்கும் போது அவர் பார்மில் இல்லை என்று நினைக்கவே முடியாது. அவர் எப்போதும் போல் தான் விளையாடி வருகிறார்.

ஆனால் ரசிகர்கள் விராட் கோலி மீது அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்புகளை வைத்து விட்டனர். அவர் அனைத்து போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். நீங்கள் அவர் ஆடிய டெஸ்ட் போட்டிகளை பார்க்கும்போது கூட பேட்டிங்க்கு கடினமான சூழலில் தாக்குப் பிடித்து நின்று 50,60 ரன்கள் அடித்து விடுகிறார்.

இதுவே வேறு ஒரு வீரர் இப்படி செய்தால் அவரை அனைவரும் பாராட்டி இருப்பார்கள். ஆனால் விராட் கோலியிடம் ரசிகர்கள் சதத்தை மட்டும் தான் எதிர்பார்க்கிறார்கள். இதனால் விராட் கோலி 50, 60 ரன்களில் ஆட்டம் இழந்தால் அவர்களுக்கு ஏமாற்றம் வந்து விடுகிறது.விராட் கோலி எப்போதும் கடின பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்” என்று ரஷீத் கான் குறிப்பிட்டார்.

அவரைப் பார்த்தாலே மற்றவர்களுக்கும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஊக்கம் கிடைக்கும் என்றும் ரஷித் கான் குறிப்பிட்டுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை