இரண்டாவது முறையாக பிக் பேஷ் லீக்கை புறக்கணிக்கும் ரஷித் கான்?

Updated: Mon, Aug 19 2024 15:22 IST
Image Source: Google

கடந்தாண்டு தொடக்கத்தில் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிராக தலிபான் அரசு செயல்பட்டு வருவதாக, அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஃப்கான்ஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி விளையாட இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. 

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் இம்முடிவுக்கு ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன், இம்முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மாற்றாவிட்டால் தானும் பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடுவது குறித்து ஆலோசிக்க வேண்டி இருக்கும் என்று தனது எச்சரிக்கையையும் கொடுத்திருந்தார். ஆனாலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை ஒத்திவைப்பதாக அறிவித்தது. 

இதனையடுத்து கடந்தாண்டு நடைபெற்ற பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இருந்து ரஷித் கான் விலகினார். இதனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ரஷித் கான் இடையிலான விரிசலானது அதிகமானது. இதன் எதிரொலியாக இவ்விரு அணிகளும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மற்றும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர்களில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்திய போட்டிகள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றது. 

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் எதிர்வரும் பிக் பேஷ் லீக் தொடருக்கான வரைவில் இருந்து தனது பெயரை சேர்க்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தாண்டு பிக் பேஷ் லீக் தொடரிலும் ரஷித் கான் பங்கேற்கபோவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அவர் பிக் பேஷ் லீக் தொடரை புறக்கணிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதுகுறித்து அவர் பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடிவரும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பிலிருந்து வெளியான தகவலின் படி, அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் நிர்வாகம் ரஷித் கானின் இந்த முடிவை ஏற்பதாகவும்,  இதனால் அவர் மீந்த எந்தஃபொரு வொறுப்பையும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் இனி வரும் சீசன்களில் அவர் விளையாட விரும்பும் பட்சத்தில் அவரை வரவேற்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ரஷித் கான் பிக் பேஷ் லீக் தொடரில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக 6 சீசன்களில் விளையாடிய நிலையில், அதில் மொத்தமாக 69 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் அவரது சிறந்த பந்துவீச்சாக 17 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் பேட்டிங்கிலும் 69 போட்டிகளில் 49 இன்னிங்ஸில் விளையாடி 403 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை