அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த சாய் சுதர்ஷன் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சாய் சுதர்ஷன் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாரூக் கானும் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ராகுல் திவேத்தியா 24 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுக்க, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து கடின இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதன்படி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரஷித் கான் ஸ்கொயர் லெக் திசையில் அடிக்க முயன்ற பந்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான டைவை அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா
இம்பாக்ட் வீரர்கள்: வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த் சிந்து, அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், அர்ஷத் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, ஃபசல்ஹக் ஃபரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே
Also Read: Funding To Save Test Cricket
இம்பாக்ட் வீரர்கள்: குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, யுத்வீர் சிங் சரக், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்