தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!

Updated: Thu, Sep 12 2024 19:24 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் நான்கு நாள் ஆட்டமும் டாஸ் வீசப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியானது முழுவதுமாக கைவிடப்படும் வாய்ப்பும் உள்ளது.

இதனையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

மேற்கொண்டு இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக ஆல் ரவுண்டர் ஆண்டிலே சிமெலேனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆல்ரவுண்டர் ஜேசன் ஸ்மித் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நகாபா பீட்டர் ஆகியோருக்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ஹஸ்மதுல்லா ஷாஹிதி நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயம் காரணமாக நியூசிலாந்து தொடரை தவறவிட்ட நட்சத்திர வீரர் ரஷித் கான் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். 

மேற்கொண்டு நட்சத்திர வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, குல்பதின் நைப், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ஃபசல் ஹக் ஃபரூக்கி, முகமது நபி உள்ளிட்ட வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு அப்துல் மாலிக், தார்விஷ் ரசூலி உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இந்த அணியில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஃப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷீத் கான், நங்யால் கரோட்டி, அல்லா முகமது கசன்ஃபர், ஃபசல் ஹக் ஃபரூக்கி, பிலால் சாமி, நவீத் ஸத்ரான், ஃபரித் அஹ்மத் மாலிக்.

Also Read: Funding To Save Test Cricket

தென்ஆப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்சி, ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ, நகாபா பீட்டர், அண்டில் சிமெலேன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் மற்றும் லிசாத் வில்லியம்ஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை