தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணியானது இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதேசமயம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்திற்கு முன்னேறியது. 

Advertisement

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டர்களால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக மான் பாஃப்னா 26 ரன்களைச் சேர்த்தார். திண்டுக்கல் அணி தரப்பில் விக்னேஷ் 3 விக்கெட்டுகளையும், சுபோத் பாட்டி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் விமல் குமார் 28 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய அஸ்வின் அரைசதம் கடந்ததுடன் 69 ரன்களைச் சேர்த்து அசத்தினார். 

இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன்,  9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசன் டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிக்ஸை எதிர்த்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடவுள்ளது. மேலும் இப்போட்டியில் 30 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 69 ரன்களைச் சேர்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்திலும் அபாரமாக விளையாடிய அஸ்வின் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 57 ரன்களைக் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்நிலையில் நேற்றைய இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்திலும் அஸ்வின் ஆட்டநாகன் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News