SA vs IND: ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் அஸ்வின்?

Updated: Sun, Dec 26 2021 09:07 IST
Ravichandran Ashwin is likely to be recalled for the ODI series against South Africa (Image Source: Google)

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் மூலம் டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார். 

இந்நிலையில் அவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் ஒருநாள் தொடரிலும் கம்பேக் கொடுக்கவுள்ளது ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை