ஷாருக் கானை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு!

Updated: Wed, Nov 29 2023 13:19 IST
ஷாருக் கானை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு! (Image Source: Google)

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்சர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதனையொட்டி ஏற்கனவே அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார், விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், அம்பத்தி ராயுடு, கைல் ஜேமிசன், சிசண்டா மகாலா, சேனாபதி, பகவத் வர்மா, ஆகாஷ் சிங் உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்துள்ளது.

இதன் மூலமாக சிஎஸ்கே அணி 6 இடங்களை நிரப்ப வேண்டிய நிலை உள்ளது. இதற்காக சிஎஸ்கே அணியிடம் மொத்தமாக ரூ.31.4 கோடி கையிருப்பில் வைத்துள்ளது. இதன் மூலமாக ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளருக்கான இடங்களை எளிதாக நிரப்ப முடியும்.  அதேபோல் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டேரல் மிட்சல், கோட்சியே உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை ஒருவரையாவது வாங்கும் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர். 

இதனிடையே சென்னை அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை என்ற விமர்சனங்கள் நீண்ட ஆண்டுகளாக சிஎஸ்கே மீது உள்ளது. அதனை மாற்ற இந்த மினி ஏலத்தில் வாய்ப்புகள் அமைந்துள்ளது. ஏனென்றால் மெகா ஏலத்தின் போது இளம் வீரர் ஷாரூக் கானை வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக இருந்தது. 

இவரை வாங்குவதற்காக பஞ்சாப் அணியிடம் சிஎஸ்கே கடுமையான போட்டியை அளித்தது. ரூ.8.75 கோடி வரை ஷாரூக் கானை வாங்க சிஎஸ்கே முயற்சித்த போது, பஞ்சாப் அணி ரூ.9 கோடி கொடுத்து அவரை வாங்கியது. அதற்கேற்ப சில அதிரடியான ஃபினிஷிங்கை பஞ்சாப் அணிக்காக கொடுத்தார். ஆனால் தற்போது ஷாரூக் கானை பஞ்சாப் அணி விடுவித்துள்ளது. 

இதுகுறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “வரும் மினி ஏலத்தில் ராயுடுவின் இடத்தை நிரப்புவதற்காக ஷாரூக் கானை சிஎஸ்கே நிர்வாகம் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே நிர்வாகிகள் தீவிரமாக இருந்தனர். இதனால் ஷாரூக் கான் இம்முறை சிஎஸ்கே அணிக்கு செல்வார் என்று நினைப்பதாக” தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை