தோனிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய அஸ்வின்!

Updated: Fri, Jul 07 2023 22:27 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாகவும் வெற்றிகரமான கேப்டனாகவும் இருந்தவர் மகேந்திர சிங் தோனி. இவர் தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் அத்தனை கோப்பைகளையும் கைப்பற்றியது.

சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமே தன்னுடைய ஆதிக்கத்தை நிறுத்தி விடாமல் ஐபிஎல் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகரமான கேப்டனாக இன்றளவும் மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். இவர் தலைமையிலான சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2020 மற்றும் கடைசியாக நடந்து முடிந்த 2023 ஆகிய ஐபிஎல் சீசன்களில் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. மேலும் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வெறுமனே கோப்பையை மட்டும் வென்று தரவில்லை. விளையாடிய 14 சீசன்களில் 12 முறை பிளே-ஆப் சுற்றுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அதில் பத்து முறை பைனலுக்கும் எடுத்துச் சென்றுள்ளார். வேறு எந்த ஐபிஎல் அணியும் இவ்வளவு வெற்றிகரமாக செயல்பட்டதில்லை.

கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது, பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இன்றளவும் வெற்றிகரமான வீரராகவும் கேப்டனாகவும் இருந்து வரும் மகேந்திர சிங் தோனி ஜூலை 7ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் உலகமே வாழ்த்து கூறியது.

அதேநேரம் தோனிக்கு வாழ்த்து கூறாத வீரர்கள் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் காலையிலிருந்து தோனிக்கு வாழ்த்து போஸ்ட் போடவில்லை என்று பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளார். அதை தன்னுடைய வாழ்த்து ட்வீட்டில் குறிப்பிட்டும் உள்ளார். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை