மேட் ஹென்றியை க்ளீன் போல்டாக்கிய ஜடேஜா - வைரல் காணொளி!
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 90 ரன்களையும், ரிஷப் பந்த் 60 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் இந்திய அணி 263 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சில் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியில் வில் யாங் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் அஜாஸ் படேல் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் மேட் ஹென்றியின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதன்படி, ஜடேஜா வீசிய 44ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை தடுத்து விளையாட முயன்ற மேட் ஹென்றி அதனை தவறவிட, அது நேரடியாக ஆஃப் ஸ்டம்பை தக்கியது. இதனால் 10 ரன்களை எடுத்த நிலையில் மேட் ஹென்றி தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா விக்கெட் வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.