கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!

Updated: Wed, Jul 26 2023 23:24 IST
கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை தொடர்ந்து ஜடேஜாவும் ஒரு மாஸ் சாதனையை படைக்க இருக்கிறார்.இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்கும் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகவும் பிரம்மாண்ட சாதனைகளை படைத்து வருகிறார். குறிப்பாக இந்திய அணியின் பல வெற்றிக்கு ஜடேஜா முக்கிய காரணமாக இருக்கிறார். 

தற்போது உள்ள காலகட்டத்தில் கூட இந்திய அணியில் சமநிலைக்கு ஜடேஜாவின் பங்கு பெரும் முக்கியத்துவம் ஆகும். அதேபோல், பேட்டிங்கிலும் மாஸ் காட்டும் ஜடேஜா அணியின் ஏழாவது வீரராக களம் இறங்கி பெரிய ஷார்ட்டுகளை விளையாடும் வல்லமையை உடையவர். மேலும் பந்து வீச்சிலும் 10 ஓவர்களை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதோடு முக்கிய விக்கெட்களையும் எடுக்க கூடியவர்.

இந்திய அணி உலக கோப்பையில் இம்முறை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு ஜடேஜா தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். பேட்டிங், பந்துவீச்சு மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கிலும் ஜடேஜாவின் மாஸ் குறித்து நாம் சொல்லித் தெரிய தேவை இல்லை.

இந்த நிலையில் ஜடேஜா ஒரு மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார். தற்போது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.இது மட்டுமல்லாமல் 200 விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்தினால் கபில்தேவுக்கு பிறகு 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் ஜடேஜாவுக்கு சொந்தமாகும்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய பந்துவீச்சில் முக்கிய வீரராக களமிறங்கும் ஜடேஜா ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் முன்னாள் கேப்டன் கபில் தேவின் மற்றொரு சாதனையையும் தகர்க்கவுள்ளார். அதாவது கபில்தேவ் இதுவரை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 41 ஒருநாள் போட்டியில் விளையாடி 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் ரவீந்திர ஜடேஜா 29 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இத்தொடரில் ஜடேஜா மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை