ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் ஜடேஜா 56 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய 4000 ரன்களைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

இதனை ஜடேஜா பூர்த்தி செய்யும் பட்சத்தில் இந்த வடிவத்தில் 4000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் மற்றும் 200+ விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார். முன்னதாக ஹர்திக் பாண்டியா 5508 ரன்களையும், 203 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் ரவீந்திர ஜடேஜா இதுவரை டி20 கிரிக்கெட்டில் 343 போட்டிகளில் 249 இன்னிங்ஸ்களில் விளையாடி 3944 ரன்கள் மற்றும் 232 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: ரஹ்மனுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், ரோவ்மன் பாவெல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி

Also Read: LIVE Cricket Score

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ஷேக் ரஷித், ஆயுஷ் மத்ரே, சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் தூபே, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), தீபக் ஹூடா/உர்வில் படேல், நூர் அகமது, கலீல் அகமது, மத்திஷா பத்திரனா/நாதன் எல்லிஸ்.
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News