பேட்டிங், பவுலிங்கில் பங்களிப்பை வழங்கிய மகிழ்ச்சியாக உள்ளது - ரவீந்திர ஜடேஜா!

Updated: Sat, Feb 11 2023 20:18 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது . இந்தத் தொடரின் முதலாவது போட்டி கடந்த ஒன்பதாம் தேதி நாக்பூரில் நடைபெற்றது . இந்தப் போட்டியில் இன்று இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது .

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் . மேலும் இந்திய அணியின் பேட்டிங்கின் போது 70 ரன்களை சேர்த்தார் . அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக ஆட்டநாயக்கன் விருது ரவீந்திர ஜடேஜா விற்கு வழங்கப்பட்டது . அப்போது பேசிய அவர், “ஐந்து மாதங்களுக்குப் பின் இந்திய அணிக்கு திரும்ப வந்து டேட்டிங் மற்றும் பந்துவீச்சின் மூலம் பங்களிப்பை வழங்கியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது . காயத்திலிருந்து மீண்டு வந்த போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஓய்வில்லாமல் உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்தேன். 

இந்த ஆடுகளத்தில் சுழல் இருந்தது மேலும் சில பந்துகள் தாழ்வாக சென்றன. அதனால் எல்லா பந்துகளையும் ஸ்டம்பை குறி வைத்து நேராக வீசுவதையே தனக்கு இலக்காகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு பந்தை வீசும் போதும் தனக்குத்தானே ஸ்டெப்புகளை நோக்கி வீச வேண்டும் என்று கூறினேன்.

பேட்டிங்கின் போது ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்கள் மிகவும் முக்கியமானவை.  அந்த இடங்களில் என்னால் முடிந்த அளவு ரன்களை குவிக்க முயற்சி செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை