சாம்சனை க்ளீன் போல்டாக்கிய ஜடேஜா - வைரல் காணொளி!

Updated: Wed, Apr 12 2023 22:36 IST
Image Source: Google

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 17ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போது டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஜெயஸ்வால் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து 10 ரன்களுக்கு துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்ததாக உள்ளே வந்த தேவ்தத் படிக்கல் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர் ஐந்து பவுண்டரிகள் உட்பட 26 பந்துகளில் 38 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் வந்த இரண்டாவது பந்திலேயே ஜடேஜா பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். யாரும் எதிர்பாராத வகையில் ஐந்தாவது வீரராக களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்தார். ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த மொயின் அலி இந்த வாய்ப்பை நழுவவிட்டார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட அஸ்வின் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரிகள் உட்பட 22 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அசத்திய ஜோஸ் பட்லர் மீண்டும் ஒருமுறை அரைசதம் அடித்தார். அதன் பிறகு பட்லரை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நீடிக்கவிடவில்லை. மூன்று சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடித்தபின் 36 பந்துகளில் 52 ரன்களுக்கு மொயின் அலியின் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

 

15 ஓவர்களில் 135 ரன்கள் அடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடைசி ஐந்து ஓவர்களில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெறும் 40 ரன்கள் மட்டுமே அடித்தது. 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்தது. ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை