ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து எம் எஸ் தோனி  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியானது இந்த ஐபிஎல் தொடரில் 7 வெற்றிகள், 3 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், ராஜத் படிதர், தேவ்தத் படிக்கல் மற்றும் டிம் டேவிட் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் பந்துவீச்சில் புவனேஷ்வர், ஹேசில்வுட், குர்னால் பாண்டியா உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

எஞ்சியுள்ள வீரர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணியின் வெற்றியைத் தடுத்து நிறுத்துவது கடினமாகும். மேற்கொண்டு அந்த அணி கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸை சொந்த மைதானத்தில் வீழ்த்திய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அந்த அணி சொந்த மைதானத்தில் வெற்றிபெற்று ரசிகர்களுக்கு விருந்துபடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 8 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்தில் தொடர்கிறது. இதன் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்தும் முதல் அணியாக வெளியேறியுள்ளது. இதனால் இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. 

அணியின் பேட்டிங்கில் ஷேக் ரஷீத், அயூஷ் மாத்ரோ உள்ளிட்ட இளம் வீரர்களுடன் சாம் கரண், டெவால்ட் பிரீவிஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சில் நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மதீஷா பதிரானா ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ஷேக் ரஷித், ஆயுஷ் மத்ரே, சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் தூபே, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), தீபக் ஹூடா, நூர் அகமது, கலீல் அகமது, மத்திஷா பத்திரனா/நாதன் எல்லிஸ்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் – 34
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 21
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 12
  • முடிவில்லை - 01

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜிதேஷ் சர்மா
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஜேக்கப் பெத்தேல், டெவால்ட் ப்ரீவிஸ்
  • ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரன், குர்னால் பாண்டியா (துணை கேப்டன்)
  • பந்து வீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், நூர் அகமது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News