ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Apr 09 2025 12:54 IST
Image Source: Cricketnmore

Royal Challengers Bengaluru vs Delhi Capitals Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

RCB vs DC: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் -  எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு
  • நேரம் - ஏப்ரல் 10, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

RCB vs DC Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 24 போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 18 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 9 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 7 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 141 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 212 ரன்கள் உள்ளது. இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் நிச்சயம் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

RCB vs DC: Where to Watch?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

RCB vs DC Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 31
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 19
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 11
  • முடிவில்லை - 01

RCB vs DC Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஜிதேஷ் சர்மா
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ரஜத் படிதார், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், குர்னால் பாண்டியா, விபராஜ் நிகம்
  • பந்து வீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், யாஷ் தயாள்.

Royal Challengers Bengaluru vs Delhi Capitals Probable Playing XI

Royal Challengers Bengaluru Probable Playing XI: பில் சால்ட், வீராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

இம்பேக்ட் வீரர் - சுயாஷ் சர்மா.

Delhi Capitals Probable Playing XI: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், கேஎல் ராகுல், அபிஷேக் போரல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா.

இம்பேக்ட் வீரர் - முகேஷ் குமார்.

RCB vs DC Dream11 Prediction, RCB vs DC, RCB vs DC Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, RCB vs DC Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Royal Challengers Bengaluru vs Delhi Capitals

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை