Advertisement

Royal Challengers Bengaluru vs Delhi Capitals, IPL 2024 Dream11 Team: இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 59 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் எந்தவொரு அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாளு அதிகரித்துள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலின் 5ஆம் இடத்திலும், ஆர்சிபி அணி 12 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 7 தோல்விகள் என 7ஆம் இடத்திலும் உள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடைவதுடன் பிளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

Advertisement

RCB vs DC: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - இரவு 7.30 மணி

RCB vs DC, Pitch Report

பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை குவிக்கலாம். மேலும் இங்கு எளிதாக 180 ரன்களைகூட எட்டலாம் என்பது அணிகளுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

RCB vs DC Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 29
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 18
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 11
Advertisement

RCB vs DC: Where to Watch?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Royal Challengers Bengaluru vs Delhi Capitals Probable Playing XI

Advertisement

Royal Challengers Bengaluru Probable Playing XI: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங், கர்ண் சர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன்.

Delhi Capitals Probable Playing XI : ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்பதின் நைப், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது

RCB vs DC, Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: அபிஷேக் போரல்
  • பேட்டர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், ரஜத் படிதார், ஜேக் ஃப்ரேசர் மெக்கூர்க் (துணை கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்: அக்ஸர் படேல், வில் ஜாக்ஸ், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள்: குல்தீப் யாதவ், யாஷ் தயாள்
Advertisement

RCB vs DC Dream11 Prediction, Today Match Prediction, Today Match RCB vs DC, RCB vs DC Dream11 Team, RCB vs DC Head-to-Head Record, Fantasy Cricket Tips, RCB vs DC Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Royal Challengers Bengaluru vs Delhi Capitals

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News