ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Apr 10 2023 10:41 IST
RCB vs LSG IPL 2023 Match 15 Dream11 Team: Virat Kohli or Kyle Mayers? Check Fantasy Team, C-VC Opti (Image Source: CricketNmore)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 
  • இடம் - எம்.சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணி தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை பந்தாடியது. உள்ளூரில் நடந்த இந்த ஆட்டத்தில் கேப்டன் பிளிஸ்சிஸ், விராட் கோலி இருவரும் அரைசதம் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவின் சுழலில் சிக்கி 81 ரன் வித்தியாசத்தில் பணிந்தது. மறுபடியும் சொந்த ஊரில் விளையாடும் பெங்களூரு அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. முதல் இரு ஆட்டங்களில் சொதப்பிய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.

அபருடன் மைக்கேல் பிரேஸ்வெல், கிளென் மேக்ஸ்வேல் ஆகியோரும் ரன்களைச் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பந்துவீச்சில் டேவிட் வில்லி, முகமது சிராஜ், கரண் சர்மா, ஹர்ஷல் படேல் ஆகியோருடன் வெய்ன் பார்னெல், வநிந்து ஹசரங்கா ஆகியோரும் அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய ஆட்டத்தில் ஹைதராபாத்தை 121 ரன்னில் சுருட்டியதுடன், அதில் குருணல் பாண்ட்யா ஆல்-ரவுண்டராக ஜொலித்து வெற்றியை எளிதாக்கினார்.

ஆனால் குறைவான பவுண்டரி தூரம் கொண்ட பெங்களூருவில் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். கேப்டன் ராகுல், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் என்று நட்சத்திர வீரர்களை கொண்டுள்ள லக்னோ அணியில் இன்றைய ஆட்டத்தில் குயின்டான் டி காக்கும் களம் காணும் போது பேட்டிங் வரிசை மேலும் வலுவடையும். எனவே ரன்வேட்டைக்கு பஞ்சமிருக்காது.

பந்துவீச்சில் மார்க் வுட், அமித் மிஸ்ரா, ரவி பிஸ்னோய் ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் எதிரணி பேட்டர்களுக்கு சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • ஆர்சிபி - 02
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 00

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ண் ஷர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கே.எல். ராகுல் (கே), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட் / குயின்டன் டி காக், க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னோய்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன் / குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் - கேஎல் ராகுல், விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், க்ருனால் பாண்டியா, மைக்கேல் பிரேஸ்வெல், கைல் மேயர்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - ரவி பிஷ்னோய், டேவிட் வில்லி, கர்ன் சர்மா

கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - விராட் கோலி, கைல் மேயர்ஸ், குயின்டன் டி காக், ஃபாஃப் டூ பிளெசிஸ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை