Royal Challengers Bengaluru vs Punjab Kings Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

RCB vs PBKS Match Details

  • மோதும் அணிகள்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு
  • நேரம் - ஏப்ரல் 18, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

M.Chinnaswamy Stadium Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 34 போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 18 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 9 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 7 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 141 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 212 ரன்கள் உள்ளது. இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் நிச்சயம் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

RCB vs PBKS: Where to Watch?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

RCB vs PBKS Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 33
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 16
  • பஞ்சாப் கிங்ஸ் - 17

RCB vs PBKS Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பில் சால்ட், பிரப்சிம்ரன் சிங்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர் (துணை கேப்டன்), ரஜத் படிதார், நேஹல் வதேரா, பிரயன்ஷ் ஆர்யா
  • ஆல்-ரவுண்டர்கள் - குர்னால் பாண்டியா, மார்கோ ஜான்சன்
  • பந்து வீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், யுஸ்வேந்திர சாஹல்.

RCB vs PBKS Predicted Playing 11

Royal Challengers Bengaluru XI: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா.

இம்பாக்ட் வீரர் – தேவ்தத் படிக்கல்.

Punjab Kings XI: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), நேஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

இம்பாக்ட் வீரர் - சூர்யான்ஷ் ஷேட்ஜ்.

RCB vs PBKS Dream11 Prediction, RCB vs PBKS, RCB vs PBKS Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, RCB vs PBKS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Royal Challengers Bengaluru vs Punjab Kings

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News