Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad Dream11 Prediction, IPL 2025: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் தொடங்கிவுள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் 65ஆவது லீக் போட்டியில் ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான லக்னோவில் உள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை தக்கவைக்க முயற்சி செய்யும், அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

RCB vs SRH Match Details

  • மோதும் அணிகள்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - மே 23, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Ekana Cricket Stadium, Lucknow Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 65ஆவது போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 09 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 4 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 151 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 199 ரன்கள் உள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால், பேட்டர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

RCB vs SRH: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

RCB vs SRH Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 25
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 13
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 11
  • முடிவில்லை - 01

RCB vs SRH Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ரஜத் படிதார்
  • ஆல்ரவுண்டர்கள் - அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், குர்னால் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள்- பாட் கம்மின்ஸ், லுங்கி இங்கிடி.
Advertisement

RCB vs SRH Predicted Playing 11

Royal Challengers Bengaluru XI :பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள்.

இம்பேக்ட் வீரர் - சுயாஷ் சர்மா.

Advertisement

Sunrisers Hyderabad XI : அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷில் படேல், ஹர்ஷ் துபே, ஜீஷன் அன்சாரி, இஷான் மலிங்கா, ஜெய்தேவ் உனத்கட்.

இம்பாக்ட் வீரர் - கமிந்து மெண்டிஸ்/டிராவிஸ் ஹெட்.

RCB vs SRH Dream11 Prediction, RCB vs SRH, RCB vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, RCB vs SRH Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News