வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து ரீஸ் டாப்லி விலகல்!

Updated: Fri, Nov 15 2024 09:04 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள ஒருநாள் தொடரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. 

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது. இருப்பினும் இத்தொடரில் மேலும் இரண்டு டி20 போட்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்காது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டி20 போட்டிகளில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி விலகியதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது 2 ஓவர்களை வீசிய ரீஸ் டாப்லி காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே பெவிலியனுக்கு திரும்பினார். இதனையடுத்து அவருக்கான மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. 

இதனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனிலும் ரீஸ் டாப்லி இடம்பிடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் ரீஸ் டாப்லியின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான எஞ்சியுள்ள டி20 போட்டிகளில் இருந்து அவர் விலகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மருத்துவர் சிகிச்சைகாக இங்கிலாந்து திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இத்தொடரில் அவருக்கான மாற்று வீரராக யாரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடந்து முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியானது 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன், டி20 தொடரில் மட்டும்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாஃபர் சோஹன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜான் டர்னர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை