முகமது ஷமிக்கு ஓய்வளித்தது தவறான முடிவு - சுனில் கவாஸ்கர்!

Updated: Thu, Mar 09 2023 12:28 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலவச ரன்களை வழங்கி வருவது ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி, 4வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ்க்கு பதில், முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். இப்போட்டியில் டாசை இழந்து இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. 

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவை 200 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், 2 வார ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ள முகமது ஷமி பந்தை சரியான லைனில் வீசாமல் தடுமாறினார். இதனால் பந்து அங்கும், இங்கும் சென்றது. இதனை கணித்து பந்தை பிடிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் பரத் தடுமாறினார். இதனால் முதல் 5 ஓவரில் மட்டும் இந்திய அணி கூடுதல் ரன்களாக 11 தரப்பட்டது.

அப்போது கிரிக்கெட் வர்ணணையில் இருந்த கவாஸ்கர், இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக வறுத்து எடுத்தார். முகமது ஷமி தொடர்ந்து பந்துவீசினால் தான் அவர் அபாயகரமான வீரராக இருப்பார் என்றும், 2ஆவது டெஸ்ட்டுக்கும், 3ஆவது டெஸ்ட்க்கும் 10 நாட்களுக்கு மேல் இடைவெளி இருந்தும், 3ஆவது டெஸ்டில் ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டது முட்டாள் தனமான முடிவு என்றும் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

ஓய்வு வழங்கப்பட்டதன் மூலம் முகமது ஷமி தன்னுடைய பந்துவீச்சின் லைன் மற்றும் லெங்த்தை தவறவிட்டதாகவும் கூறினார். முகமது ஷமி போன்ற வீரரை ஒரு தொடர் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, பந்துவீச்சில் முகமது ஷமி தடுமாறி வருவதாக கூறினார்.

முகமது ஷமி போர் குதிரை போல் எப்போதும் உழைத்து கொண்டு இருக்கும் வீரர் என்றும், அவர் தொடர்ந்து பந்துவீசினால் மட்டுமே சரியான முறையில் அவர் பந்துவீசுவார் என்றும் ரவி சாஸ்த்ரி கூறினார். இதே போன்று போட்டியின் போதே முகமது ஷமிக்கு நீண்ட ஓவர்களை தொடர்ந்து வீசி பயன்படுத்த வண்டும் என்று குறிப்பிட்டார். வெறும் 3 அல்லது 4 ஓவர் மட்டுமே முகமது ஷமிக்கு ஸ்பெல் பயன்படுத்தினால், அவருடைய ரிதம் மிஸ் ஆகும் என்றும் ரவி சாஸ்த்ரி கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை